Followers

வால்பாறையில் வன விலங்குகளை புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் வனத்துறை

 வால்பாறையில் வன விலங்குகளை புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் வனத்துறை




வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் சமீப காலமாக வன விலங்குகள் நட மாட்டம் அதிகரித்துள்ளததல் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் நுழையும் வனவிலங்குகளின் நடமாட்டத்தை அறிந்து கொண்டு தங்களை பாதுகாத்துக் கொள்ள ஒளியுடன்  ஒலி எழுப்பும் சோலார் சென்சார் கருவிகள் வனத்துறை சார்பில் பொருத்தப்பட்டுள்ளது மேலும் தேயிலை தோட்ட பகுதிகளில் கரடி நடமாட்டம் தென்படுகிறது இந்நிலையில் புது தோட்டம் எஸ்டேட் பகுதியில் கரடி ஒன்று தேயிலைத் தோட்டத்தில் நடந்து சென்றது அப்போது சுற்றுலா பயணி ஒருவர் வாகனத்தை நிறுத்தி தனது செல்போனில் கரடியை வீடியோ பதிவு செய்தார் அப்போது அவரைப் பார்த்து கரடி எழுந்து நின்று ஆக்ரோசத்தை வெளிப்படுத்தியது இந்த காட்சியை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது 


இதைப் பற்றி வனச்சரகர் வெங்கடேசன் தெரிவிக்கையில் 

வால்பாறையில் அதிகமாக துண்டு சோலைகள் காணப்படுகிறது வனவிலங்கு தேயிலை தோட்டத்தை கடந்து தான் மற்றொரு சோலைக்கு நகர்ந்து செல்கின்றது எனவே வனவிலங்கு நடமாட்டம் பகுதிகளில் வாகனத்தை நிறுத்தக்கூடாது வனவிலங்குகளை புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று வனச்சரகர் வெங்கடேசன் தெரிவித்துள்ளனர்


நமது செய்தியாளர் வடிவேல்

Post a Comment

Previous Post Next Post