குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த கருஞ்சிறுத்தை வைரலாகும் வீடியோ
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் 55% சதவீதம் வனப்பகுதி கொண்ட மாவட்டமாகும் இங்கு மான், யானை, சிறுத்தை, கரடி, புலி, காட்டு மாடு போன்ற வனவிலங்குகள் அதிகளவில் வசிக்கக்கூடிய மாவட்டமாகும்.
இந்நிலையில் வனவிலங்குகள் சமீப காலமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வரத் தொடங்கியுள்ளன இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரவேனு , பெரியார் நகரில் நேற்று இரவு கருஞ்சிறுத்தை ஒன்று உலா வந்துள்ளது..
இந்த கருஞ்சிறுத்தை உலா வந்தது அங்கு ஒருவர் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது இதனை கண்ட அந்த வீட்டின் உரிமையாளர் இந்த காட்சியினை இணையத்தில் பதிவிட்டுள்ளார் தற்பொழுது இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது
நமது செய்தியாளர் கரன்சி சிவக்குமார்