ஆனைமலை புலிகள் சார்பாக 29 புலிகள் தினம் கொண்டாடப்பட்டு பள்ளி குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
வால்பாறை : ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனக்கோட்டம், மானாம்பள்ளி வனச்சரகம் மற்றும் வால்பாறை வனச்சரகம் சார்பில் கள இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் அவர்களது அறிவுரைப்படி 29.07.2024 இன்று வால்பாறையில் சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்பட்டது. ஜூலை’ 29 சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு வால்பாறையில் உள்ள பழங்குடியின மாணவ, மாணவியர்கள் அதிகமாக பயிலும் உண்டு, உறைவிடப்பள்ளியில் சர்வதேச புலிகள் தின விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆசிரியப் பெருமக்கள், ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் புலி வேடமிட்ட நடனம், புலியின் பண்புகள் மற்றும் புலியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு உரைகள், ஓவியப்போட்டி ஆகியவை இடம் பெற்றது. இவ்விழாவின் முடிவில் போட்டியில் பங்குபெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது
மானாம்பள்ளி வனச்சரகர் கிரிதரன் மற்றும் வால்பாறை வனச்சரகர் வெங்கடேசன் வனக்காப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
நமது செய்தியாளர்:வடிவேல்