தோட்டத்திற்குள் புகுந்த இரண்டு காட்டு யானைகள் : மாடுகளுக்கு வைத்து இருந்த தவிடு மூட்டையை அப்படியே சாப்பிட செல்போன் வீடியோ காட்சி வைரல்
கோவை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர், மருதமலை, தடாகம், நரசீபுரம் போன்ற சுற்று வட்டார கிராமங்களில் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. இங்கு பல ஆயிரக் கணக்கான மக்கள் அதனை நம்பி வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனப் பகுதியில் ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக வன விலங்குகள் அடிக்கடி அப்பகுதிகளில் உணவு, தண்ணீரை தேடி வரத் துவங்கியது. இதைத் தொடர்ந்து வீடுகள், ரேஷன் கடைகள், உணவுப் பொருள்கள் இருக்கும் இடங்கள், விவசாய விளை நிலங்கள் என ருசியான உணவுகளை உண்ணத் துவங்கியது.
வனப் பகுதியில் கிடைக்கின்ற உணவை விட இங்கு கிடைக்கும் ருசியான உணவிற்காக உள்ளே புகுந்து உண்டு வாழ கற்றுக் கொண்டது. இதனால் அப்பகுதிகளை விட்டு மீண்டும் காட்டுக்குள் செல்லாமல் ஒவ்வொரு பகுதியாக முகாமிடம் வருகிறது. வனத்துறையினரும் பல்வேறு குழுக்கள் அமைத்து கண்காணித்து உடனடியாக அதனை வனப்பகுதிக்குள் விரட்டியும் வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து தடாகம், கெம்பனூரில் உள்ள விவசாயி கதிரவன் என்பவர் தனது தோட்டத்தில் மாடுகள் வளர்த்து வருகிறார். அதற்காக தவிடு மூட்டையை மாடுகள் கட்டி இருந்த இடத்திற்கு அருகே வைத்து இருந்து உள்ளார். அப்பகுதியில் சுற்றிக் கொண்டு இருந்த இரண்டு காட்டு யானைகள் அதன் வாசனையை மோப்பம் பிடித்து நேற்று இரவு சுமார் ஒரு மணி அளவில்
அங்கு வந்த இரண்டு காட்டு யானைகளில் ஒன்று தவிடு முட்டையை தட்டி தூக்கி அப்படியே விழுங்குகிறது. அதனை தனது செல்போனில் வீடியோ எடுத்த கதிரவன். அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது
நமது செய்தியாளர் நேசராஜ்