வால்பாறையில் பராமரிக்கப்பட்டு வந்த புலி வண்டலூர் கொண்டு செல்ல படுகிறது வனத்துறை தகவல்
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள முடீஸ் எஸ்டேட் பகுதியில் மூன்று வருடத்திற்கு முன்பு உடல்நலம் குன்றி சுற்றி திரிந்த புலி
நடமாடுவதை பார்த்த அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் வனத்துறையினர் முடிஸ் எஸ்டேட் பகுதியில் புலியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
மேலும் புலியின் நடமாட்டத்தை முடீஸ் பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் வனத்துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில், தேயிலை தோட்ட அருகில் உள்ள புதர் செடியில் புலி பதுங்கி இருப்பது ட்ரோன் கேமரா மூலம் கண்டுபிடித்தனர்.
உடனடியாக இருபதுக்கும் மேற்பட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர்.வேட்டை தடுப்பு காவலர்கள் மூலம் புலியை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.ஆனால், புலி பிடி படாமல் வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்தது.இந்நிலையில் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு வேட்டை தடுப்பு காவலர்கள் வலையை வீசி புலியை பிடித்தனர்.
பிடிபட்ட புலியின் உடலில் காயங்கள் இருந்ததால் மிகவும் சோர்வுடன் குடியிருப்பு பகுதிக்குள் நடமாடி வந்தது என தெரிய வந்தது.
முள்ளம்பன்றியை வேட்டையாட முயற்சிக்கும்போது புலிக்கு காயம் ஏற்பட்டது என வனத்துறையினர் கூறினர்.
மேலும் காயம் அடைந்த புலிக்கு சிகிச்சை அளிப்பதற்காக ரொட்டிக்கடை பகுதியில் உள்ள மனித வன விலங்கு மோதல் மற்றும் தடுப்பு மையத்திற்கு கொண்டு சென்றனர்.
பின்னர் வனத்துறை மருத்துவர்கள் புலிக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் புலியை மானாம்பள்ளி வன சரகத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் உள்ள மந்திரி மட்டம் பகுதியில் சுமார் 75 லட்சம் மதிப்பீட்டில் மிகப் பெரிய கூண்டு அமைத்து பராமரித்து வந்தனர் .
மேலும் கூண்டில் உள்ள புலிக்கு வனத்துறையினர் வேட்டையாடும் பயிற்சி அளித்து வந்தனர் பின்னர் முயலை கூண்டிற்குள் விட்டு முயலை புலி வேட்டையாடுவதை அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மூலம் வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.
தற்போது புலியின் எடை கூடி தனித்து வேட்டையாடும் சூழ்நிலையில் புலி உள்ளது
மேலும் புலி தனித்து வேட்டையாடுவதற்கு அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் முயற்சி செய்தனர் .
ஆனால் கூண்டிற்குள் வைத்து பராமரிக்கப்பட்ட புலியை அடர்ந்த வனப் பகுதிக்குள் விட்டால்.
மற்ற வனவிலங்குகள் புலியை தாக்கக்கூடும் என தெரிகிறது. எனவே ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் மற்றும் துணை கள இயக்குனர் ஆகியோரின் ஒப்புதலோடு தேசிய புலிகள் ஆணையத்தின் ஆலோசனையின் படி மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் கிரிதரன் தலைமையில் வால்பாறை மானாம்பள்ளி வனச்சரகத்தில் பராமரிக்கப்பட்டு வந்த புலியை சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்ல திட்டமிட்டு மருத்துவர்களின் ஆலோசனைப்படி புலியை ஆம்புலன்ஸ் வாகனத்தில் அமைக்க பட்டிருந்த கூண்டில் ஏற்றி பாதுகாப்பாக சென்னை வண்டலூர் ரெஸ்கியூ வன உயிரியல் மையத்திற்கு கொண்டு சென்றனர்
நமது செய்தியாளர் வடிவேல்