வயநாடு காற்றாற்று வெள்ளம் யானைகளை விட்டு வைக்கவில்லை அதிர்ச்சி ஊட்டும் காட்சிகள்
கரையேறிய யானைமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள இடங்களில் நிலச்சரிவு ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. நேற்று முன்தினம் இரவு முதல் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.
இன்நிலையில் வயநாடு மாவட்டம் நிலம்பூர் பகுதியில் கருளை வனப்பகுதியில் வெளியேறிய காட்டிய யானைகூட்டம் வனப்பகுதி ஒட்டி உள்ள ஆற்றைக் கடக்க முற்பட்டது அப்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் காட்டு யானை கூட்டம் அடித்து செல்லப்பட்டது சிறிய தூரம் இழுத்து செல்லப்பட்ட யானைகள் பாறையைப் பிடித்துக் கொண்டு மெதுவாக பாறை மேல் ஏறியது அதில் தாய் யானை ஒன்று குட்டியை அரவணைப்போடு மற்றொரு முனைக்கு அழைத்து சென்றது இந்த காட்சி மறுமுனையில் நின்று கொண்டிருந்த வனத்துறை ஊழியர் வீடியோவாக பதிவு செய்திருந்தார் இந்த வீடியோ வைரலாகி வருகிறது
நமது செய்தியாளர் வயநாடு ஹனீஷ்