Followers

சாலக்குடி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்ட யானை ஒன்று வெளியேற முடியாமல் போராடி தவிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது

 சாலக்குடி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்ட யானை ஒன்று வெளியேற முடியாமல் போராடி தவிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது



தென்மேற்கு பருவமழையால் கேரளா முழுவதும் கனமழை கொட்டி வருகிறது. கொட்டி தீர்த்து வரும் கனமழையால் கேரளாவில் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.

ஆறுகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. வனப்பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் அடித்துச்செல்கிறது. தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


விலங்குகளின் இயல்பு வாழ்க்கையும் அதோ கதிதான் போல.. என்று சொல்லும் வகையில், வால்பாறை அருகே உள்ள கேரளா மாநிலத்தில் சலக்குடி அருகே வெற்றிலைபாறை ஆற்றில் கனமழையால் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இரவு முழுவதும் பெய்த மழையால் ஆற்றில் நீர்மட்டம் 8மீட்டர் அளவுக்கு உயர்ந்தது.

இந்த ஆற்றின் வெள்ள நீரில் சிக்கிய காட்டு யானை ஒன்று கரையேற முடியாமல் நீரில் அடித்து சென்றது சிறிதுரம் சென்ற காட்டு யானை தனது துதிக்கையால் மரத்தின் வேர்களைப் பிடித்துக் கொண்டும் மெதுவாக ஏறியது இந்த காட்சி மறுமுனையில் நின்ற வன ஊழியர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து இருந்தார் அவர் கூறுகையில் வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் இறுதிவரை போராட வேண்டும் என்று இந்த யானை எனக்கு உணர்த்தியது என்றார்

திருச்சூர் செய்தியாளர்:Faisal

Post a Comment

Previous Post Next Post