முதுமலை வனப்பகுதியில் தாயை பிரிந்த குட்டி யானையை 11 மணி நேரத்துக்கு பிறகு தாயே யானையுடன் சேர்த்து வைத்த வனத்துறையினர்
முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மசனகுடி அடுத்துள்ள மாயார் பகுதியில் இன்று காலை குட்டியானை ஒன்று சுற்றித்திரிந்தது இதை சாலை வழியாக சென்றவர்கள் வீடியோ பதிவு செய்தனர் அப்போது அந்த குட்டி யானை பிளிறி கொண்டு அங்கும் இங்கும் ஓடி சுற்றி திரிந்தது வாகனங்களை கண்டும் அருகில் ஓடி வந்து துரத்தியது தாய் யானையை பிரிந்த குட்டி யானை பரிதவித்து வனப்பகுதியில் சுற்றித்திரிந்த சம்பவம் அறிந்த வனத்துறையினர் அப்பகுதிக்குச் சென்று குட்டி யானையை கண்காணித்து வந்தனர் யானை கூட்டங்களுடன் இருந்த குட்டி யானை தாய் யானையை பிரிந்து சுற்றித் திரிவதை அறிந்த வனத்துறையினர் குட்டியானையை தாய் யானையுடன் சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.ட்ரோன் உதவியுடன் தாய் யானை நடமாட்டத்தை கண்காணித்த வனத்துறையினர் சீகூர் வனத்தில் அசூரா மட்டம் பகுதியில் யானை கூட்டம் இருப்பதை அறிந்தனர். குட்டி யானையை நேற்று இரவு அங்கு கொண்டு சென்று 3 யானை கூட்டங்கள் இருந்த இடத்தில் விட்டு வந்தனர் வனத்துறையினர். யானை குட்டியின் நடமாட்டத்தை 3 தனி வனக்குழுவினர் கண்காணித்து வருவதாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
நமது செய்தியாளர் :கரன்சி சிவகுமார்