கண்ணை பறிக்கும் மின்னல் வேட்டில் ஒளியாய் தெரிந்த காட்டு யானை வைரலாகும் வீடியோ
தமிழக -- கேரள எல்லையில் அமைந்துள்ள, வால்பாறையில், பருவமழைக்கு பின் வனவளம் பசுமையாக இருப்பதால், மளுக்கப்பாறை, மயிலாடும்பாறை, பன்னிமேடு வழியாக வரும் யானைகள், பல்வேறு எஸ்டேட்களில் நடமாட்டம் அவ்வப்போது காணப்படுகிறது இந்நிலையில் வால்பாறையில் இருந்து அக்காமலைக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது அப்போது லேசான மழை இருந்ததால் அரசு பேருந்தை ஓட்டுநர் பேருந்தை மெதுவாக இயக்கிக் கொண்டிருந்தனர் சற்று எதிர்பாராமல் இருந்த நிலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றைக் காட்டி யானை சாலையை கடக்க முற்பட்டது சுதாரித்துக் கொண்ட அரசு பேருந்து ஓட்டுனர் பேருந்து நிறுத்தி யானைக்கு வழி விட்டனர்
அப்போது யானையின் பின்புறம் மேக மூட்டத்தில் இருந்து மின்னல் வேட்டில் யானையை அழகாக காட்சி தந்தது இந்த காட்சி பஸ்ஸில் வந்த பயணி ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார் அந்த பதிவில் இன்று யானைகள் தினமான இன்று யானை எங்களுக்கு காட்சி அளித்தது போல் இருந்தது என்று பதிவிட்டு இருந்தார்
நமது செய்தியாளர் வடிவேல்