கோதமங்கலம் பூயம்குட்டி வனப்பகுதி ஒட்டியுள்ள ஆற்றில் மிதந்து வந்த 6 மாதமான குட்டியானை உலா வைரலாகும் வீடியோ
கோதமங்கலம் என்பது எர்ணாகுளம் மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு நகராட்சியாகும்.இது 'மலைச்சிகரங்களின் நுழைவாயில்' என்று அழைக்கப்படுகிறது. இந்த நகரம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ளது. இங்கு யானை மான் சிறுத்தை ஆகி விலங்குகள் வாழ்ந்து வருகின்றது இந்த நிலையில் கோதமங்கலம் பூயம்குட்டி வனப்பகுதி ஒட்டியுள்ள ஆற்றில் மிதந்து வந்த ஆறு மாதமான குட்டியானை குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்தது குட்டியானை பார்த்த பொதுமக்கள் சிலர் தனது செல்போன் மூலம் வீடியோவாக பதிவு செய்தனர் சிலர் யானை குட்டி அருகில் நின்று புகைப்படம் எடுத்தனர் மிரண்டு போன குட்டியானை அங்கும் இங்குமாக ஓடியது உடனடியாக எர்ணாகுளம் இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது அந்தப்பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. மேலும் அந்த குட்டி யானை, தாய் யானையை பிரிந்து அந்தப்பகுதியில் சுற்றித்திரிந்தது தெரியவந்தது. மேலும் தாய் யானையை பிரிந்த அந்த குட்டி யானை பரிதவித்து கொண்டிருந்தது. தொடர்ந்து பிளிறியபடியே இருந்தது. அங்கும் இங்கும் ஓடி கொண்டே இருந்தது. இதையடுத்து அந்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டனர்.அந்த குட்டி யானை எங்கிருந்து வந்தது, அதன் தாய் யானை எங்கே சென்றது பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து ரோந்து பனையில் தாய் யானையை தேடி வருகின்றனர்
நமது செய்தியாளர் :
எர்ணாகுளம் ஹனீஷ்