வால்பாறை அருகே குடியிருப்பு பகுதியில் உலா வந்த யானைகளை வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர் வனத்துறையினர்
கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளையொட்டி வனப்பகுதிகள் உள்ளன.
இந்த வனப்பகுதிகளில் காட்டு யானைகள், காட்டெருமை, சிறுத்தை, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.இந்த வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழைந்து வருகிறது.
இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள முடிஸ் எஸ்டேட் பஜார் பகுதியில் பொதுமக்கள் வழக்கம் போல் தங்கள் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.
அப்போது வனத்தை விட்டு வெளியேறிய காட்டிய யானைகள் முடிஸ் பஜார் பகுதியில் சிறிது நேரம் அந்த யானைகள் சுற்றி திரிந்தது. உடனடியாக மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது விரைந்து வந்த வனத்துறையினர் காட்டு யானைகளை வனப் பகுதிக்குள் அனுப்பி வைத்தனர்.
நமது செய்தியாளர் வடிவேல்