வால்பாறையில் 2024 ஆம் ஆண்டுக்கான யானைகள் வரத்து துவங்கியது.
தமிழக -- கேரள எல்லையில், வனவளம் நிறைந்த வால்பாறையில், ஆண்டுதோறும் பருவமழைக்கு பின், காட்டுயானைகள் அதிகளவில் முகாமிடுகின்றன. கேரள மாநிலம் மளுக்கப்பாறை, மயிலாடும்பாறை வழியாக வால்பாறைக்கு யானைகள் தனித்தனி கூட்டமாக வருகின்றன. இந்த யானைகள் மழை காலம் முடியும் வரை வால்பாறையில் உள்ள பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் உள்ள துண்டு சோலைகளில் முகமிடுகின்றன .
2024 ஆண்டுக்கான யானைகள் வரவானது ஆகஸ்ட் 1 தேதி தொடங்கியது இதில் முதல் யானைகள் கூட்டமானது சேக்கல் முடி வழியாக வர துவங்கியது இந்த யானை கூட்டங்களை கண்காணிக்க மானாம்பள்ளி வனச்சரகர் கிரிதரன் மற்றும் வால்பாறை வனச்சரகர்கள் வெங்கடேசன் சிறப்பு குழுக்களை நியமித்து யானைகளை தொடர்ந்து கண்காணிக்க உத்தரவிட்டு உள்ளனர்.
மேலும் இந்த கூட்டத்தில் 6 பெண் யானை உள்ளன அதில் ஒரு பெண் யானை ஒன்று குட்டியை ஈன்றெடுத்துள்ளது தற்போது இந்த யானை கூட்டம் முடிஸ் சாலையை கடக்க முற்பட்டது அப்போது மானாம்பள்ளி வனத்துறையினர் பாரஸ்ட் முத்துமாணிக்கு வன காப்பாளர் விபின் மற்றும் விஜயமோகன், பிரதாப், ஜான் ,வேட்டை தடுப்பு காவலர்கள் வாகனங்களை நிறுத்தி யானை கடக்க உதவி செய்தனர் தற்போது யானைகள் தாய்முடி பகுதியில் சுற்றித் திரிவதால் யானைகள் தொடர்ந்து வனத்துறை கண்காணித்து வருகின்றனர்
மேலும் இதைப்பற்றி வனத்துறை தெரிவிக்கையில்:
பொதுவாக தாய் யானை குட்டி ஈன்றால், அந்தக் குட்டியை விட்டு சிறிதுதூரம் கூட நகராது. குட்டி ஓரளவுக்கு நடந்து செல்லும் பக்குவத்துக்கு வந்த பின்னரே, குட்டியையும் அழைத்துக்கொண்டு, மற்றொரு இடத்துக்குச் செல்லும். அதற்கு 10 நாட்கள் முதல் 20 நாட்கள் ஆகலாம்.
தன் குட்டிக்கு மற்ற விலங்குகளாலோ, மனிதர்களாலோ துன்பம் நேரிடுவது தெரிந்தாலும், குட்டியுடன் தாய் யானை அந்த இடத்தை விட்டு நகரும். அப்படி நகரும்போது, குட்டி யானைக்கு ஆபத்து நேர்வதும்உண்டு. எனவே, பொதுமக்கள் யாரும் அந்தப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரித்து வருகிறோம். மேலும், தாய் யானை இருக்கும் பகுதி, யானைக் கூட்டம் நிற்கும் பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்” என்கின்றனர் வனத் துறையினர்.
நமது செய்தியாளர் வடிவேல்