குன்னூரில் குடியிருப்பில் புகுந்து வளர்ப்புநாயை வேட்டையாட முயன்ற சிறுத்தை கண்ணில் பட்ட காட்டுப்பன்றியை அடித்து உயரமான மரத்தில் தொங்க விடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம்
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
குறிப்பாக உணவு, மற்றும் குடிநீர் தேடி குடியிருப்பு பகுதியை நோக்கி உலா வருவதாலும் வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி செல்வதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் குன்னூர் வெலிங்டன் அருகே தனியார் பள்ளி அருகே உள்ள குடியிருப்பில் புகுந்த சிறுத்தை ஒன்று வளர்ப்பு நாயை துரத்தி துரத்தி வேட்டையாட முயன்றது. நாய் குரைத்துக் கொண்டே சிறுத்தையிடம் இருந்து கண் இமைக்கும் நேரத்தில் தப்பியது.இதேப் போல. கோத்தகிரி பகுதியில் கருஞ் சிறுத்தை நாயை பிடிக்க முயன்ற இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் உணவு தேடி வந்த சிறுத்தை கண்ணில் பட்ட காட்டுபன்றியை வேட்டையாடி உயரமான மரத்தில் தொங்கவிடப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர் இதைப் பற்றி உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது விரைந்து வந்த வனத்துறையினர் அப்பகுதி ஆய்வு செய்து வருகின்றனர்.
நமது செய்தியாளர் கரன்சி சிவக்குமார்