ஒலி எழுப்பாமல் யானைகளை சாலையை கடக்க உதவிய வனத்துறையினருக்கு சுற்றுலா பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்
வால்பாறை வனத்துறையினர் மேற்கொண்ட முயற்சியால் வால்பாறையில் வனவிலங்கு - மனித மோதல் வெகுவாக குறைந்துள்ளது
வால்பாறை
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரு வனச்சரகங்களிலும் தென்மேற்கு பருவ மழையின்போது பசுமை திரும்பியதும், கேரளா வனப் பகுதியில் இருந்து நூற்றக்கணக்கான யானைகள் வால்பாறைக்கு இடம்பெயர்வது வழக்கம். ஜூன் முதல் பத்து மாதங்களுக்கு மேலாக இந்தப் பகுதியில் முகாமிடும் யானைகள், வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு தேயிலைத் தோட்டங்களில் கூட்டமாகவும், தனித்தனியாகவும் முகாமிடுகின்றன.
பகல் நேரத்தில் தேயிலைத் தோட்டத்தை ஒட்டியுள்ள துண்டுச் சோலை காடுகளில் முகாமிடும் யானைகள், இரவு நேரத்தில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து, வீடு மற்றும் கடைகளை சேதப்படுத்துகின்றன. இது தடுக்கும் முயற்சியில் வால்பாறை வனத்துறையுடன் மற்றும் மானாம்பள்ளி வனத்துறையினர் இரவு பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டு யானைகளை குடியிருப்புகள் நுழைவதை தடுத்து வருகின்றனர் இந்த நிலையில் வால்பாறை அருகே உள்ள தாய்முடி எஸ்டேட் பகுதியில் யானைக் கூட்டம் இருப்பதை பார்த்த வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர் மாலை 7 மணி அளவில் வால்பாறை - முடிஸ் சாலையை கடக்க முற்பட்டது அப்போது முத்து மாணிக்கம் தலைமையில் வனவர் விபின் மற்றும் மனித மோதல் தடுப்பு குழுவினர் யானையை சாலையை கடக்க இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்தி யானைகளை சாலையை கடக்க உதவியினர் மெதுவாக யானைகள் சாலையை கடந்து சென்றது
சுற்றுலா பயணிகள் தெரிவிக்கையில் :
யானைகள் சாலையை கடக்கும் பொழுது எந்த ஒலியும் எழுப்பாமல் வனத்துறையினர் யானைகளை சாலையை கடக்க உதவி புரிந்தார்கள் பார்ப்பதற்கு மிகவும் எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது எப்போதும் யானைகளை பார்த்தால் பொதுமக்கள் கூச்சலிடுவார்கள் ஆனால் வால்பாறை உள்ள வனத்துறையினர்கள் எந்த ஒலியும் எழுப்பாமல் எந்த தொந்தரவு செய்யாமல் சாலையை கடக்க உதவி புரிந்தார்கள் எங்களுக்கும் மிக ஆச்சரியமாக இருந்தது நாங்கள் உடனே வனத்துறையினரை பார்த்து எங்கள் நன்றிகளை தெரிவித்தோம் என்றனர்
நமது செய்தியாளர் :வடிவேல்