சாலையில் மரத்தை உடைத்துப் போட்டு சாலை நின்ற கபாலி வால்பாறை அதிரப்பள்ளி
சாலையில் போக்குவரத்து பாதிப்பு
வால்பாறையில் இருந்து கேரள மாநிலம் சாலக்குடி செல்லும் 60 கி.மீ. தொலைவிலான
சாலையின் இரு புறங்களும் அடா்ந்த வனப் பகுதி ஆகும். இதில் வனப் பகுதியில் இருந்து
யானைகள் கூட்டமாக சாலைக்கு வருவது வழக்கம். இதில் குறிப்பாக இரவு நேரத்தில் அதிக
அளவில் யானைகள் சாலைக்கு வருவதால் மாலை 6 மணிக்கு மேல் அந்த சாலையில் வாகனங்கள்
செல்ல வனத் துறையினா் தடை விதித்துள்ளனா். இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு
முன் ஒரு யானை தொடா்ந்து சாலையில் முகாமிட்டு அவ்வழியாக வரும் வாகனங்களுக்கு
வழிவிடாமல் விரட்டி வந்தது. நீண்ட நாள் போராட்டத்துக்குப் பிறகு அந்த யானையை
அடா்ந்து வனப் பகுதிக்குள் வனத் துறையினா் விரட்டினா்.
தற்போது, அந்த யானை மீண்டும் சாலைக்கு வந்து வாகனங்களை வழிமறித்து வருகிறது.
இதனால் அழ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு வனத் துறையினா் எச்சரிக்கை விடுத்து
அனுப்பி வருகின்றனா். இந்நிலையில் அதிரப்பள்ளி மலுகுப்பாறை சாலையில் கபாலி
என்கின்ற காட்டு யானை சுற்றித் திரிகிறது கடந்த 2/1/2025 தேதியில் மாலை 6 மணி
வனப்பகுதியை விட்டு வெளியேறிய கபாலி யானை ஆனைமலை சாலையில் மரத்தை உடைத்து போட்டு
அங்கேயே நின்றது அவ்வழியில் சென்ற வாகன ஓட்டிகள் ரோட்டை கடக்க முடியாமல்
நின்றதால் உடனடியாக அதிரப்பள்ளி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது விரைந்து
வந்த வனத்துறையினர் சாலையில் இருந்த மரத்தை அகற்றி யானையை அப்பகுதியில் இருந்து
அனுப்பி வைத்தனர் இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
நமது
செய்தியாளர் :வடிவேல்