இந்த உலகத்தில் அம்மா போல் பெரும் போராளியை இதுவரை யாரும் பார்த்திருக்க முடியாது இந்த தாய் யானையை கூறலாம் எந்த கஷ்ட காலத்திலும் இந்த இரண்டு குட்டிகளையும் கைவிடுவதில்லை
திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளி, ஏலாட்டு முகம் வன சரகத்தில் உள்ள எண்ணபனை எஸ்டேட் பகுதியில் கடந்த 2022 வருடம் ஜனவரி மாதம் இரண்டு குட்டியுடன் கூடிய 5 காட்டு யானைகள் சுற்றி வந்துள்ளது. மேலும் யானைகள் கூட்டத்தில் பிறந்து இரண்டு மாதங்களே ஆன குட்டி யானைக்கு தும்பிக்கை இல்லாமல் இருந்தது.
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து வன அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து மாவட்ட சிறப்பு அதிகாரி சிலேஸ் சந்திரதா, யானை கூட்டத்தில் தும்பிக்கை இல்லாமல் இருந்த குட்டி யானையை படம் பிடித்துள்ளார். இதைத் தொடர்ந்து வனத்துறையினர், யானையின் தும்பிக்கை அறுந்து விழுந்ததா? அல்லது பிறக்கும்போதே தும்பிக்கை இல்லாமல் பிறந்ததா என்று ஆய்வு செய்து வந்தனர்
தாய் யானையின் அரவணைப்பில் தும்பிக்கை இல்லதா குட்டி யானை உடல் ஆரோக்கியத்துடன் உள்ளது இந்த நிலையில் 2025 ஜனவரி 1ஆம் தேதி இந்த யானை கூட்டம் ஏலாட்டு முகம் வன சரகத்தில் உள்ள எண்ணபனை தோட்டத்திற்கு வந்தது அங்கு இருந்த பனை மரத்தின் குருத்துகளை தாய் யானை கொடுக்க தலையாட்டிய பாரு சாப்பிட்டது மற்ற குட்டி யானைகள் போல் விளையாடியது வனப்பகுதிகள் செல்ல தயாரானவுடன் குட்டி யானையும் தலை ஆட்டியவாறு வனப் பகுதிக்குள் சென்று மறைந்தது
நமது செய்தியாளர் திருச்சூர் விபின்