வால்பாறை குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் வனவிலங்குகளை தடுக்கும் முயற்சியில் ஒலியெழுப்பும் சென்சார் கருவி பொருத்தப்பட உள்ளது வனத்துறை தகவல்
வால்பாறை:
மலைப்பிரதேசமான வால்பாறையில் காட்டு யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. மேலும் குடியிருப்பு பகுதி அருகே தேயிலை தோட்டங்கள் உள்ளதால், அதற்குள் பதுங்கி இருக்கும் வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் நடமாடி வருகிறது. இந்த நிலையில் வால்பாறை நகர் பகுதிகளில் வளர்ப்பு பிராணிகளை குறிவைத்து அடிக்கடி சிறுத்தை உலா வருகிறது .கடந்த 6 ஆம் தேதி வால்பாறையில் உள்ள வாழைத் தோட்டம் மக்கள் குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் இரண்டு சிறுத்தைகள் உலா வந்தது அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது இந்த வீடியோ பதிவு 09/01/2025 சமூக வலைதளங்களில் வைரலானதை எடுத்து வால்பாறை வனச்சரகர் வெங்கடேசன் உத்தரவின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற கணேஷ் பாரஸ்ட் தலைமையிலான மனித மோதல் தடுப்பு குழுவினர் அப்பகுதி ஆய்வு மேற்கொண்டனர் மேலும் சிறுத்தை நடமாட்டம் பகுதிகளில் ஒலி எழுப்பும் சென்சார் கருவிகள் பொருத்தப்படும் மேலும் இரவு நேரங்களில் பொதுமக்கள் வீடுகளில் வளர்த்து வரும் வளர்ப்பு பிராணிகள், கால்நடைகளை வெளியே விடுவதை தவிர்க்க வேண்டும்.
பொதுமக்கள் வனத்துறைனருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றனர்
நமது செய்தியாளர் :வடிவேல்