நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் குடிக்க வந்த காட்டுயானை சுமார் 100 அடி உயரமுள்ள அருவியின் அருகே பாறையில் மேல் இருந்து உருண்டு விழுந்து பெண் காட்டு யானை உயிரிழப்பு.......
குன்னூர்-மேட்டுப்பாளையம்
சமவெளி பகுதியான மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி நீலகிரி மாவட்டத்தை நோக்கி வருவது வழக்கம் இந்நிலையில் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஆறாவது கொண்டை ஊசி வளைவு அருகே மலையின் உச்சியில் தண்ணீர் குடிக்க வந்த காட்டுயானை சுமார் 100 உயரமுள்ள அருவியின் பாறையில் வழுக்கி விழுந்து பெண் காட்டு யானை உயிரிழந்தது தகவல் அறிந்த மாவட்ட வன அலுவலர் கவுதம் உதவி வன அலுவலர் மணிமாறன் முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ் கால்நடை மருத்துவர் ரேவதி மற்றும் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானையின் சடலத்தை பார்வையிட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு யானையின் உடல் பாகங்களை ஆய்விற்கா எடுத்து சென்றனர் மேலும் யானையின் உடல் அதே வனப்பகுதியில் புதைக்கப்பட்டது இச்சம்பவம் பர்லியார் பழங்குடி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது