ஆழியாறு அணை கரையோர பகுதியில் முதலை நடமாட்டம் உள்ளதால் வால்பாறை மற்றும் ஆழியார் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அணை நீருக்குள் இறங்கி விளையாடவோ குளிக்கவோ வேண்டாம் என பொதுப்பணி மற்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
முதலை நடமாட்டம்
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. அணைக்கு மின் உற்பத்திக்கு பின் அப்பர் ஆழியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலமாகவும், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் மூலம் நீர்வரத்து உள்ளது. இந்த நிலையில் தற்போது மழை பொழிவு இல்லாததால் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்து விட்டது.
இதனால் குரங்கு அருவி அருகே மணல்மேடுகள் வெளியே தெரிகின்றன. இந்த நிலையில் அணையில் இருந்து முதலை ஒன்று வெளியேறி மணல்மேடு பகுதியில் படுத்து உறங்கியது இந்த காட்சி வால்பாறை செல்லும் சாலையில் இருந்து சுற்றுலா பயணி ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் தற்போது இந்த புகைப்படம் வைரலானதை அடுத்து
ஆழியாறு அணை கரையோர பகுதியில் முதலை நடமாட்டம் உள்ளதால் வால்பாறை மற்றும் ஆழியார் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அணை நீருக்குள் இறங்கி விளையாடவோ குளிக்கவோ வேண்டாம் என பொதுப்பணி மற்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.,
நமது செய்தியாளர் சக்திவேல்