Followers

சத்தம் போட்டு ஊரையே கூட்டிய கரடிகளால் பரபரப்பு நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கிணற்றுக்குள் குட்டியுடன் விழுந்த கரடி 3 மணி நேரத்திற்கு மேலாக உயிருக்கு போராடி தத்தளித்த கரடியை மீட்ட வனத்துறையினர்

சத்தம் போட்டு ஊரையே கூட்டிய கரடிகளால் பரபரப்பு 


நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கிணற்றுக்குள் குட்டியுடன் விழுந்த கரடி 3 மணி நேரத்திற்கு மேலாக உயிருக்கு போராடி தத்தளித்த கரடியை மீட்ட வனத்துறையினர்  



நீலகிரி:


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவது குறிப்பாக பகல் நேரங்களிலும் இரவு நேரங்களிலும் கரடிகள் உணவு தேடி ஊருக்குள் உலா வருகிறது இந்த நிலையில் கோத்தகிரி ஜக்கனாரை ஊராட்சிக்குட்பட்ட தும்பூர் பகுதியில் குடிநீர் கிணற்றுக்குள் இரண்டு கரடிகள் தவறி விழுந்து கிணற்றுக்குள் விழுந்த கரடிகள் நீண்ட நேரம் சத்தமிட்டதை அடுத்து அப்பகுதி மக்கள் கிணற்றுக்குள் சத்தத்தை கேட்டு எட்டிப் பார்த்தனர். கிணற்றுக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட பின்பு நடந்த சம்பவ இடத்திற்கு வந்த வனச்சரகர் செல்வராஜ் , வனவர் குமார் தலைமையிலான பத்து பேர் கொண்ட வனத்துறையினர் கிணற்றுக்குள் விழுந்த கரடிகளை மீட்க போராடினர் சுமார் மூன்று மணி நேரம் கழித்து கிணற்றுக்குள் விழுந்த கரடிகளை ஒரு மணி நேரத்திற்கு பிறகு பெரிய ஏணியை கிணற்றுக்குள் வைத்தவுடன் இரண்டு கரடிகளும் மெதுவாக ஏணி வழியாக சென்றன. ஏறி வெளியே வந்து பின்பு வனப்பகுதிக்கு ஓடின. 


இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது கிணற்றுக்குள் விழுந்த இரண்டு கரடிகளை வனத்துறையினர் ஏணி மூலம் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்ட செயல் பாராட்டப்பட்டது. மக்கள் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டிருக்கும் தற்போது பகல் நேரம் என்பதால் கரடிகள் விழுந்தது தெரியவந்தது என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர் மேலும் கரடிகள் விழுந்ததால் குடிநீர் கிணற்றை தூய்மைப்படுத்தி கிணற்றை சுற்றி பாதுகாப்பு இரும்பு வளையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் .

எமது செய்தியாளர்: கரன்சி சிவக்குமார்


Post a Comment

Previous Post Next Post