நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே மேல்குந்தா-தாய்சோலை இடையே புலிசோலை வனப்பகுதி சாலையில் புலி நடமாட்டமா??? வனத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம்:
மஞ்சூர் அருகே மேல்குந்தா-தாய்சோலை இடையே புலிசோலை வனப்பகுதி உள்ளது. இந்த பகுதியில் சிறுத்தை, கரடி, யானை, காட்டெருமை, மான்கள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று புலிசோலை அருகே சாலையில் புலி ஒன்று சாலையை கடந்தது இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டி சாலையில் நடந்து சென்ற புலியை வீடியோ எடுத்து இனையத்தில் பரப்பியுள்ளனர் தற்போது இந்த வீடியோ வைரல் ஆனதை அடுத்து குந்தா வனத்துறையினர் இந்த வீடியோ அப்பகுதியில் எடுக்கப்பட்டதா என்பதை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
நமது செய்தியாளர் :கரன்சி சிவகுமார்