வால்பாறை அருகே அதிரப்பள்ளியில் நெற்றியில் காயத்துடன் சுற்றுத் திரியும் காட்டு யானைக்கு சிகிச்சை
வால்பாறை :
வால்பாறை அருகே உள்ள சாலக்குடி, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் சாலைகளில் கடந்த ஒரு மாதமாக வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று நெற்றியில் காயத்துடன் சுற்றித்திரிந்ததை பார்த்த வனத்துறை ஊழியர்கள் உடனடியாக DFO லட்சுமி அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு விருந்து சென்ற DFO யானைக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்து இன்று காலை வெற்றிலை பாறை என்னை பண்ணை தோட்டத்திற்கு வனத்துறையின் தலைமையில் கால்நடை மருத்துவர் டாக்டர் அருண் ஜக்காரியா தலைமையிலான கால்நடை மருத்துவ குழுவினர் காயமடைந்த யானையை கண்காணிக்க வந்தனர் இவர்களைப் பார்த்த யானை வனப்பகுதிக்குள் சென்றது யானையை கண்காணிக்க டிரோன் மூலம் யானை தேடும் பணி ஈடுபட்டனர் யானையானது அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் நின்றதால் யானை சிகிச்சை அளிக்கும் முடியவில்லை வியாழக்கிழமை மீண்டும் சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளனர் கேரளா வனத்துறையினர்
நமது செய்தியாளர் திருச்சூர் விபின்