Followers

அதிரப்பள்ளியில் நெற்றியில் காயத்துடன் சுற்றித் திரிந்த காட்டு யானைக்கு இன்று சிகிச்சை கொடுக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது

 அதிரப்பள்ளியில் நெற்றியில் காயத்துடன் சுற்றித் திரிந்த காட்டு யானைக்கு இன்று சிகிச்சை கொடுக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது




வால்பாறை அதிரப்பள்ளி:

வால்பாறை அருகே உள்ள சாலக்குடி, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் சாலைகளில் கடந்த ஒரு மாதமாக வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று   நெற்றியில் காயத்துடன் சுற்றித்திரிந்ததை பார்த்த வனத்துறை ஊழியர்கள் உடனடியாக DFO லட்சுமி அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு விருந்து சென்ற DFO யானைக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்து நேற்றைய முன்தினம் காலை வெற்றிலை பாறை என்னை பண்ணை தோட்டத்திற்கு  வனத்துறையின் தலைமையில் கால்நடை மருத்துவர் டாக்டர் அருண் ஜக்காரியா தலைமையிலான கால்நடை மருத்துவ குழுவினர் காயமடைந்த யானையை கண்காணிக்க வந்தனர் இவர்களைப் பார்த்த யானை வனப்பகுதிக்குள் சென்றது யானையை கண்காணிக்க டிரோன் மூலம் யானை தேடும் பணி ஈடுபட்டனர் யானையானது அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி நின்றதால் யானை சிகிச்சை அளிக்கும் முடியவில்லை வியாழக்கிழமை மீண்டும் சிகிச்சை அளிக்க முடிவு செய்திருந்தனர் ஆனால் யானை வனப்பகுதிக்கு நின்று கொண்டதால் சிகிச்சை அளிக்க முடியவில்லை இன்று காலை 10 குழுக்களாக பிரிந்து யானையை தேடும் பணியில் ஈடுபட்டனர் அப்போது வெற்றிலை பாறை அருகே எண்ணெய் பனைத் தோட்டத்தில் யானை கண்டனர் உடனடியாக கால்நடை மருத்துவர் டாக்டர் அருண் ஜக்கரியா மயக்க ஊசி செலுத்தினார் சிறிதுரம் ஓடிய யானை மயக்கம் அடைந்த நிலையில் நின்றது


மைக்கை ஊசி செலுத்தப்பட்டது: 

 உடனடியாக யானைக்கு கருப்பு துணியில் முகத்தை மூடப்பட்டு கால்நடை மருத்துவர்கள் ஆழமான காயத்தை சுத்தம் செய்து சீல் அகற்றி நோய் எதிர்ப்பு ஓசி செலுத்தப்பட்டு சுய நினைவு திரும்பிய பின்னர் யானையை வனப்பகுதிக்குள் அனுப்பி வைக்கப்பட்டது தொடர்ந்து யானையை ஐந்து குழுக்கள் கண்காணித்து வருகின்றனர் 



இதைப் பற்றி வன கால்நடை மருத்துவர் தெரிவிக்கையில்:

யானையை பரிசோதனை செய்தபோது நெற்றியில் உலோக துண்டுகள் எதுவும் இல்லை துப்பாக்கிச் சூட்டுக் காயம் இல்லை. மற்ற யானைகளுடன் சண்டையிட்ட போது ஏற்பட்ட காயம் என உறுதி செய்யப்பட்டது. சுமார் 35 வயதுடைய யானைக்கு தலையில் ஆழமான காயம் மற்றும் சிறிய காயம் ஏற்பட்டது. காயம், சுமார் மூன்று வாரங்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது, 


மீட்புப் பணிக்கு தலைமை தாங்கிய டாக்டர் அருண் ஜக்காரியா, யானையின் உடல்நிலை தற்போது பலவீனமாக இருப்பதாகவும், வரும் நாட்களில் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும் என்றனர்


நமது செய்தியாளர் திருச்சூர் பைசில்

Post a Comment

Previous Post Next Post