கோத்தகிரியில் காவலர் குடியிருப்பு பகுதியில் உலா வந்த சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது
நீலகிரி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுப்பகுதிகளில் வனவிலங்கு அதிகமாக காணப்படுகிறது இந்த நிலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தைகள் இரவு காவலர் குடியிருப்பு பகுதியில் உறும்பியவாறு உலா வந்தது .
காலையில் எழுந்து சிசிடி கேமராவில் பார்த்தபோது சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தை ஒன்றன்பின் ஒன்றாக நடமாடியது தெரிய வந்தது இதைப் பற்றி உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அப்பகுதிக்கு விரைந்து வந்த வனத்துறையினர் அப்பகுதியை ஆய்வு செய்து வருகின்ற மேலும் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதி விட்டு வெளியே வருவதை தவிர்க்குமாறு வனத்துறை அறிவுறுத்தி உள்ளனர்
நமது செய்தியாளர்: கரன்சி சிவகுமார்