வால்பாறை -ரொட்டிக்கடை குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை தடுக்க வனத்துறையினர் துரித நடவடிக்கை
வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறை அருகே ரொட்டிக்கடை பகுதியில் வசிக்கும் செல்வக்குமார் என்பவரின் வீட்டின் முன்புறம் நேற்று முன்தினம் சிறுத்தை ஒன்று சீறிப்பாய்ந்து சென்ற கண்காணிப்பு கேமரா பதிவு வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆனைமலை புலிகள் காப்பகம் கள இயக்குநர் உத்தரவிற்கிணங்க
வலைத்தளச் செய்தி
வால்பாறை வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் வனவர்கள் முத்து மாணிக்கம் மற்றும் கணேஷ் ஆகியோர் அடங்கிய வனப்பணியாளர்கள் அப்பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு சிறுத்தை அப்பகுதியில் நுழைவதை அறிந்து மக்கள் பாதுகாப்பாக இருக்கும் வகையில் ஒலியெழுப்பும் சென்சார் கருவி பொருத்தப்பட்டு சிறுத்தையை கண்காணிக்கும் பணியை தொடர்ந்து வருகின்றனர் மேலும் குடியிருப்பை சுற்றி மண்டிக்கிடக்கும் புதர் செடிகளை அகற்றவும் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினரிடம் அறிவுறுத்தியுள்ளனர் இதனால் அப்பகுதி பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் வடிவேல் மற்றும் வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்