பொள்ளாச்சி அடுத்த ஆழியார் கவியருவி அருகே சாலை ஓரத்தில் முகாமிட்டுள்ள ஒற்றைக் காட்டு யானை வனப்பகுதிக்குள் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர்
பொள்ளாச்சி :ஆனைமலை புலிகள் காப்பகம் நவமலை,ஆழியார், சின்னார்பதி, போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக சில்லி கொம்பன் என்கின்ற ஒற்றை காட்டு யானை நவமலை குடியிருப்பு சின்னார்பதி மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் உள்ள மா.பலா. வாழை கூந்தைப்பனைகளை ருசித்து வருகிறதுஇந்த நிலையில் இன்று மாலை ஆழியார் வால்பாறை சாலை கவியருவி அருகே சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தில் இருந்த பூக்களை பறித்து சாப்பிட்டு விட்டு நவமலை சாலையில் நின்றது உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து சென்ற ஆளியார் வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்கு அனுப்ப முயற்சியில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
இதைப் பற்றி வனத்துறை தெரிவிக்கையில்:
யானை உளாவதால் வால்பாறை பொள்ளாச்சி ஆகிய பகுதிகளுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் மிகவும் கவனத்தில் இயக்க வேண்டும் மற்றும் நவமலைக்கு செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் பொது போக்குவரத்தை பயன்படுத்துமாறு வனத்துறை அறிவுறுத்தி உள்ளனர்
நமது செய்தியாளர் :வடிவேல்