கேட்டை திறந்து உணவு பொருட்கள் தேடிய காட்டி யானை வனப்பகுதிக்குள் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்ட வன ஊழியர்கள் வைரலாக வீடியோ
கோவை: தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமப் பகுதிகளுக்குள் கடந்த சில மாதங்களாக முகாமிட்டு உள்ள காட்டு யானைகள் உணவு தேடி தோட்டங்கள் மற்றும் ஊர்களுக்குள் புகுந்து வீடுகளில் உள்ள உணவு பொருட்களை உண்டு செல்கிறது. இதை தடுக்கும் முயற்சியில் வனத்துறையினர் வாகனம் மூலம் வன விலங்குகளை வனபகுதிக்குள் யானைகளை அனுப்பும் முயற்சி ஈடுபட்டு வருகின்றனர்
இந்த நிலையில் தொண்டாமுத்தூர் அடுத்துள்ள வைதேகி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சாலை அருகே உள்ள மாரியப்பன் என்பவரின் விவசாய தோட்டத்தில் உள்ள வீட்டில் நுழைந்த காட்டிய யானை ஒன்று வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த நிலக்கடலை மற்றும் மாட்டு தீவனங்களை சாப்பிட்டுவிட்டு அப்பகுதியில் சுற்றி திரிந்தது உடனடியாக மாரியப்பன் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் அப்பகுதிக்கு விரைந்த வந்த வனத்துறையினர் யானையை வனப் பகுதிக்குள் அனுப்பும் முயற்சி ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .
தொடர்ந்து யானை வன ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றனர் வனத்துறையினர்
நமது செய்தியாளர் சுரேஷ்