வால்பாறை அருகே யானை தந்தங்களை கடத்தி விற்க முயன்ற ஐந்து பேர் கைது - இரண்டு தந்தங்கள் பறிமுதல்.,
வால்பாறை
ஆனைமலை புலிகள் காப்பகம் மானாம்பள்ளி வனச்சரக பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட யானை தந்தங்கள் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதன் அடிப்படையில் வனத்துறையினர் கடந்த சில நாட்களாக மறைமுகமாக விசாரணை மேற்கொண்டு வந்ததில்
தாய்முடி எஸ்டேட் என் சி டிவிஷனில் தொழிலாளர் குடியிருப்புகளுக்கு அருகில் சந்தேகப்படும்படியான நபர்கள் சுற்றித் திரிவதாக கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் பெயரில் 20.06.2025 ஆம் நாளன்று மாலை சுமார் ஐந்து மணியளவில் மானாம்பள்ளி மற்றும் வால்பாறை வனச்சரக அலுவலர் தலைமையில் களப்பணியாளர்கள் தணிக்கை மேற்கொண்டபோது வெள்ளை நிற டொயோட்டா ஃபார்ச்சூனர் வாகனம் TN 49AH 9000 ஒன்று சந்தேகப்படும்படியாக சுற்றித் திரிந்தது தெரியவந்தது. அந்த வாகனத்தை தணிக்கை செய்த போது யானையின் இரண்டு தந்தங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது 1.மணிகண்டன் வயது 47
2) ராஜா வயது 39
3) தேவபாலன் வயது 31
4) ராமன் வயது 35
5) பிரேம்தாஸ் வயது 29
இது தொடர்பாக பிடிபட்ட ஐந்து நபர்களையும் மேல்விசாரணை செய்து குற்றம் ஒப்புக்கொண்டதை எடுத்து அவர்களை கைது செய்து கைப்பற்றப்பட்ட இரண்டு யானை தந்தனங்களையும் ஃபார்ச்சூனர் வாகனத்தையும் வனச்சரகக அலுவலகம் கொண்டுவரப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. இச்சம்பவத்தை தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களையும் இக்குற்ற வழக்கில் தொடர்புடையவர்களாக பாவித்து நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நமது செய்தியாளர்: வடிவேல்