கர்நாடகா மாநிலம் பந்திப்பூரில் கிராமத்தை ஒட்டிய பகுதியில் உலா வந்த கழுதைப் புலி வாகனத்தை பார்த்ததும் மின்னல் வேகத்தில் ஓடிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
குன்னூர்:
வனப்பகுதிகளில் பொதுவாக யானை, புலி, சிறுத்தை, கரடி, என பல்வேறு வனவிலங்குகளை பார்த்திருக்கும் நாம் பார்க்க முடியாத வனவிலங்குகளும் ஏராளமானவை வனப்பகுதியில் உள்ளன. அதிலும் கழுதைப்புலியை பார்ப்பது அவ்வளவு எளிதல்ல. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தை ஒட்டியுள்ள கர்நாடக மாநிலம் பந்தப்பூரில் கழுதைப்புலி ஒன்று சுற்றி திரிந்தது. இதனை பார்த்த கிராம மக்கள் அதனை வீடியோ எடுத்துள்ளனர். ஆற்றைங் கரையோரம் சர்வ சாதரணமாக உலா வந்த கழுதைப்புலி வாகன சத்தத்தை கேட்டதும் மின்னல் வேகத்தில் வனப்பகுதிக்குள் ஓடிய இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நமது செய்தியாளர் கரன்சி சிவகுமார்