வால்பாறை அதிரப்பள்ளி வனசாலையில் இருசக்கர வாகனங்களை தவிர்க்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்
வால்பாறை:
அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், அடர்ந்த வனப்பகுதிகளால் சூழப்பட்டுள்ளன. இதனால், இப்பகுதியில் யானைகள் நடமாட்டம் இயல்பான ஒன்றாக உள்ளது.
இந்நிலையில் கடந்த ஜூன் 21ஆம் தேதி வால்பாறையில் இருந்து இருசக்கர வாகனத்தில் அதிரப்பள்ளிக்கு சுற்றுலா பயணிகள் வனச்சாலைகள் யானை நிற்பது தெரியாமல் வளைவில் திரும்பி உள்ளனர் அப்போது அப்பகுதியில் நின்றிருந்த யானை அவர்களை விரட்டியுள்ளது இந்தக் காட்சி வைரலானதை அடுத்து அதிரப்பள்ளி வால்பாறை வனச்சாலையில் இரு சக்கர வாகனத்தை தவிர்க்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்
நமது செய்தியாளர் வடிவேல்