Followers

பொள்ளாச்சி -வால்பாறை ஆழியார் சாலையில் காட்டு யானை நடமாட்டம் உள்ளதால் வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

 பொள்ளாச்சி: வால்பாறை ஆழியார் சாலையில் காட்டு யானை நடமாட்டம் உள்ளதால் வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.




பொள்ளாச்சி:

பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதியில் அங்காங்கே யானை நடமாட்டம் உள்ளது. வறட்சியான கலங்களில் அடர்ந்த காட்டிலிருந்து யானை உள்ளிட்ட விலங்குகள் நீர்நிலையை தேடி இடம் பெயர்கிறது.இருப்பினும், அடர்ந்த வனத்திலிருந்து யானைகள் இடம்பெயர்வது தொடர்ந்துள்ளது . கடந்த இரண்டு வாரங்களாக ஆழியார் அணைப்பகுதியில் குட்டியுடன்  யானைகள் முகாமிட்டுள்ளதால் ஞான பாலமுருகன் வனச்சரகர் உத்தரவின் பெயரில் சிவக்குமார் பாரஸ்டர் தலைமையில் வன குழுவினர் தொடர்ந்து யானைகளை கண்காணித்து வருகின்றனர் இன் நிலையில் நேற்று இரவு வால்பாறை பொள்ளாச்சி சாலையை யானை கூட்டம் கடந்தது இதைப் பற்றி உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது விரைந்து வந்த  வனப் குழுவினர்கள் இருபுறமும் சுற்றுலா வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகள்  நிறுத்தி யானைகளை கடக்க உதவி செய்தனர் இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது




இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘வால்பாறை ஆழியார் சாலையில் தற்போது காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.வனப்பகுதியில் மழை பொழிவின் காரணமாக பசுமை திரும்பி உள்ளதாலும் மற்றும் தண்ணீர் குடிப்பதற்கும் யானைகள் ஆழியார் அணைபகுதிக்குள் வருகின்றன. இதனால் வால்பாறை சாலையில் அடிக்கடி யானைகள் நின்றுகொண்டுள்ளது. மாலை 6 மணிக்கு மேல் வால்பாறை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி கிடையாது. மேலும் வால்பாறை பகுதியில் உள்ளவர்கள் வந்தால் அவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், ஆழியார் சோதனைச்சாவடியில் வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வனவிலங்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர். மலைப்பாதையில் வாகனங்களை நிறுத்தி சுற்றுலா பயனிகள் வனவிலங்கிற்கு தொல்லை கொடுத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.


நமது செய்தியாளர் :வடிவேல்

Post a Comment

Previous Post Next Post