வால்பாறை அருகே சிறுமியை தாக்கிய சிறுத்தை கூண்டில் சிக்கியது எப்படி ?

வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் முந்தா மோனிகாதேவி தம்பதியரின் 7 வயது மகள் ரோசினியை வீட்டின் முன்னே சிறுத்தை கவ்வி தூக்கிச் சென்ற நிலையில் சனிக்கிழமையன்று சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது
இச்சம்பவத்தை தொடர்ந்து அந்த சிறுத்தையை பிடிக்க வனப்பகுதியை யொட்டி கூண்டு ஒரு கூண்டும் மற்றும் இரண்டு கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டது அதைத்தொடர்ந்து மீண்டும் சிறுமியை தாக்கிய குடியிருப்பு பகுதியின் அருகே மற்றுமொரு கூண்டு வைக்கப்பட்டு அதனருகேயும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இரண்டு கூண்டுகளிலும் இரையும் வைக்கப்பட்டு வால்பாறை வனச்சரக அலுவலர் தலைமையில் வனத்துறையினர் மற்றும் பணியாளர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை 5:30 மணிக்கு கூண்டில் சிறுத்தை சிக்கியது சிக்கிய சிறுத்தையை வாகனத்தின் மூலம் ஏற்றி டாப்ஸ்லிப் அடர்ந்த வனப்பகுதியில் விட உள்ளனர் வனத்துறையினர்
நமது செய்தியாளர் வடிவேல்