நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பெரியார் நகர் பகுதியில் கரடி மற்றும் சிறுத்தை அடுத்தடுத்து உலா வந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது
கோத்தகிரி:
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகள் பெரும்பாலும் வனப்பகுதிகள் தேயிலை தோட்டங்கள் கொண்டதாக உள்ளது இதனால் சிறுத்தை கரடி காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் சர்வசாதாரணமாக உலா வருகின்றன.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள பெரியார் நகர் பகுதியில் இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய கரடி சிறுத்தை அப்பகுதியில் உலாவியது இந்த காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது
நமது செய்தியாளர் :கரன்சி சிவகுமார்