மூணார் படையப்பா குடியிருப்பு பகுதியில் பயிரிட்டு இருந்த வாழை மரத்தை ருசித்த காட்சி தற்போது வைரல் வனத்துறை (RRT குழு)எச்சரிக்கை
கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள குண்டுமலை தலையாறு ஆகிய தேயிலை தோட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக படையப்பா காட்டு யானை சுற்றித்திரிகிறது.
இந்தநிலையில் நேற்று குண்டு மழை நியூ டியூசன் லைன்ஸ் பகுதியில் படையப்பா யானை உலா வந்தது. அப்போது அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து தொழிலாளர்கள் பயிர் செய்திருந்த வாழை மரத்தை ருசி பார்த்தது இந்த காட்சி அப்பகுதியில் நின்றிருந்த எஸ்டேட் தொழிலாளர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் தற்போது வைரலாகி வருகிறது
இதைப் பற்றி வனத்துறை தெரிவிக்கையில்:
படையப்பா யானையை புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் வனத்துறை (RRT குழு) எச்சரிக்கை
நமது செய்தியாளர் k.மணிகண்டன் Munnar