ஆலைக்கு லாரியில் கொண்டு செல்லப்பட்ட கரும்புகளை, காட்டு யானை ஒன்று ருசித்து சாப்பிட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன. பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
தாளவாடி:தாளவாடியில் உள்ள தோட்டங்களில் வெட்டப்பட்ட கரும்புகள், ஆசனூர் வழியே சத்தியமங்கலம் சர்க்கரை ஆலைக்கு கொண்டுசெல்லப்படுகின்றன. இவ்வாறு கரும்புகளை கொண்டு சென்ற ஒரு லாரி, திம்பம் மலைப்பாதையில் சென்றபோது வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று
கரும்பு வாசத்தால் ஈர்க்கப்பட்ட காட்டு யானை அங்கு வந்து. லாரியிலிருந்த கரும்புகளை ஒவ்வொன்றாக முறித்து ருசிக்கத் தொடங்கியது.
ஒரு மணி நேரமாக கரும்புகளை சுவைத்தது அந்த யானை. இதைக் கண்ட சில வாகன ஓட்டிகள் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தை நிறுத்திவிட்டனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானையை காட்டுக்குள் விரட்டினர்
நமது செய்தியாளர் முருகானந்தம்