வால்பாறை அருகே குரங்கு சத்தத்தில் தெரிந்த பெரிய உருவம் வைரலாகும் வீடியோ
வால்பாறை:
மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள பசுமை மலைநகரம் வால்பாறை… இங்கு யானை, புலி, சிறுத்தை, மான், கரடி உள்ளிட்ட பல வனவிலங்குகள் இயற்கையோடு இணைந்து வாழ்கின்றன.
வனப்பகுதியில் இருந்து மற்றொரு பகுதியில் செல்லும் போது, இவை மனிதர்கள் குடியிருக்கும் பகுதிகளை கடந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனைத் தடுக்க, வால்பாறை மற்றும் மானம்பள்ளி வனத்துறையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வால்பாறை தபால் நிலையம் அருகே இரவுப் போது நடந்து சென்ற ஒரு கரடி… அப்பகுதியில் வந்த சுற்றுலா பயணிகள் அதைப் பார்த்து ஆச்சரியத்தில் வீடியோ பதிவு செய்தனர்.
அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் மேலும் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் வனத்துறை மற்றும் மனித மோதல் தடுப்பு குழுவினர்
நமது செய்தியாளர்: வடிவேல்