சாலக்குடி -அதிரப்பள்ளி பஸ்ஸின் முன்பாக திடீரென ஓடி வந்த காட்டு யானை – பஸ் நின்றதனால் தப்பியது!
சாலக்குடி:
இன்று மதியம் 12:15 மணியளவில், சாலக்குடியில் இருந்து அதிரப்பள்ளிக்கு செல்கின்ற கேரளா தனியார் பேருந்து முன்பாக தும்பூர் முழி பகுதியில் திடீரென ஒரு காட்டு யானை ஓடி வந்தது.
யானை சாலையோரத்தில் நின்றிருப்பதை கவனித்த பஸ்ஸின் ஓட்டுனர் பேருந்தின் வேகத்தை உடனே குறைத்ததால், யானையின் மீது மோதும் விபத்து தவிர்க்கப்பட்டது.இந்த திடீர் சம்பவம் பயணிகள் மத்தியில் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது.
மேலும் தனியார் பேருந்து ஓட்டுனருக்கு சமூக ஆர்வலர் மற்றும் சுற்றுலா பயணிகள் பேருந்து பயணிகள் அவருக்கு நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவித்தனர்
நமது செய்தியாளர்: வடிவேல்