*வால்பாறை அருகே தேயிலை தோட்டத்தில் குட்டி யானை உறங்க, அருகில் அமைதியாக காத்திருந்த தாய்யானை – மனதை உருக்கும் தருணம்!
வால்பாறை:
வால்பாறை அருகே உள்ள தேயிலை தோட்டப்பகுதியில், குட்டி யானை ஒன்றை உறங்கிவிட தாய் யானை அமைதியாக நின்று அதனை பாதுகாத்து காத்திருந்த அழகான தருணம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பிரதான வழித்தடத்திற்கு அருகே நடைபெற்ற இந்த நிகழ்வை அப்பகுதியில் நின்றிருந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
மனிதர்களின் உலகிலும் வனவிலங்குகளின் வாழ்விலும், தாய்மையின் உணர்வு எவ்வளவு ஆழமாய் உள்ளது என்பதை இது உணர்த்துகிறது.
இத்தகைய தருணங்கள், வனவிலங்குகளின் இயற்கையான வாழ்க்கையை நமக்குப் புரிந்துகொள்ளும் வாய்ப்பையும், அவர்களை மதிக்கும் உணர்வையும் வளர்க்கின்றன.
நமது செய்தியாளர் :வால்பாறை வடிவேல்