*ஈரோடு திம்பம் மலைப்பாதையில் பகல் நேரத்தில் சிறுத்தை உலா – வாகன ஓட்டி வீடியோ பதிவு!*
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில், 14வது கொண்டை ஊசி வளைவுக்கு அருகே, ஒரு சிறுத்தை பகல் நேரத்தில் சாலையின் நடுவே நிதானமாக உலா வந்தது.
இந்த அரிய தருணத்தை அந்த வழியாக பயணம் செய்த வாகன ஓட்டியர் வீடியோவில் பதிவு செய்துள்ளார். தற்போது அந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இயற்கை வளம் நிறைந்த திம்பம் மலைப்பாதையில் வனவிலங்குகள் உலா வருவது வழக்கமானதுதான். ஆனால் பகல் நேரத்தில் சிறுத்தையை நேரில் காண்பது மிகவும் அபூர்வமான ஒன்றாகும்.
இக்காட்சி, வனவிலங்குகள் சுதந்திரமாக நடமாடும் வழிகளில் மனிதர் பயணிக்கும் போது அதிக கவனத்துடன் இருக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறது.
வனச்சாலைகளில் வாகன ஓட்டிகள் எப்போதும் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணம் செய்ய வேண்டியது முக்கியம்.
நமது செய்தியாளர் திம்பம்: முருகானந்தம்
