வால்பாறையில் சாலையில் மிடுக்காக நடந்து சென்ற சிறுத்தை சமூகவலைதளங்களில் வைரல்
வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் சிறுத்தையின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது இந்நிலையில் நேற்று இரவு வால்பாறை அருகே உள்ள ரொட்டிக்கடை பகுதியில் உள்ள சாலையில் வாகனத்தின் முன்னே மிடுக்காக நடந்து சென்ற சிறுத்தையை பார்த்த வாகன ஓட்டி வாகனத்தை மெதுவாக இயக்கியுள்ளார் இந்நிலையில் சிறிது தூரம் சாலையிலேயே சென்ற சிறுத்தை பின்பு அருகே உள்ள புதர் பகுதியில் இறங்கி சென்றுள்ளது இந்த சிறுத்தையை வாகன ஓட்டி தனது செல்போனில் படம்பிடித்து சமூக வள தளங்களில் பதிவிட்டுள்ள நிலையில் இக்காட்சி தற்போது வைரலாகி வருகிறது
மேலும் வனவிலங்குகள் அதிகமாக நடமாடும் பகுதிகளில் வாகன ஓட்டிகள் கவனமாகவும் பாதுகாப்பாகவும் செல்லவேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்
வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்