சாலக்குடி சாலையில் லாரி மற்றும் அரசு பேருந்தை வலி மரித்து நின்ற கபாலி யானை வைரலாகும் வீடியோ
வால்பாறை - சாலக்குடி ரோட்டில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளதால், வால்பாறையில் இருந்து சுற்றுலா பயணியர் அங்கு செல்கின்றனர். இந்நிலையில், வால்பாறை-அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி ரோட்டில், கடந்த சில நாட்களாக 'கபாலி' என்ற பெயரிடப்பட்ட யானை, மழுக்கு பாறை அதிரப்பள்ளி சாலையில் நடமாடி வருகிறது
இந்நிலையில் இன்று காலை, அதிரப்பள்ளி ரோட்டில் உலா வந்த 'கபாலி' யானை, வால்பாறையில் இருந்து சென்ற லாரி மற்றும் கேரளா அரசு பேருந்து வழிமறித்தது சிறிது நேரம் கழித்து சாலையில் ஓரமாக நின்றவுடன் சாலையை கடந்தது லாரி மற்றும் கேரளா அரசு பேருந்து உடனடியாக இதைப்பற்றி வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கேரள வனத்துறையினர், தொடர்ந்து யானையை கண்காணித்து வருகின்றனர்
கேரள வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'இந்த யானையை பொறுத்தவரை, யாரையும் துன்புறுத்துவதில்லை. பாசமாக பேசினால், வாகனம் செல்ல வழிவிடுகிறது.
வால்பாறை வழியாக அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை கண்டு ரசிக்க வரும் சுற்றுலா பயணியர், இருசக்கர வாகனங்களில் வருவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்,' என்றனர்
நமது செய்தியாளர் திருச்சூர் விபின்