முதுமலை – யானைகளுடன் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்
முதுமலை:
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் தெப்பகாடு யானைகள் முகாமில் உள்ள யானைகளும் உற்சாகமாக கலந்து கொண்டன.
அங்கு பராமரிக்கப்படும் 28 யானைகளில், கிருஷ்ணா மற்றும் பொம்மி எனும் இரண்டு யானைகள் விநாயகர் கோவிலை 3 முறை சுற்றி மணி அடித்தவாறு நுழைந்து, தும்பிக்கையை உயர்த்தி விநாயகரை வணங்கின. அந்த தருணம் சுற்றுலா பயணிகளை மிகுந்தளவில் கவர்ந்தது.
விழா நிறைவாக, முகாமில் உள்ள 27 யானைகளுக்கு வெல்லம், ராகி, பொங்கல், ஆப்பிள், வாழைப்பழம், தர்பூசணி, கரும்பு உள்ளிட்ட பல சத்தான உணவுகள் வழங்கப்பட்டன.
இந்த அபூர்வ காட்சியைப் பார்த்த சுற்றுலா பயணிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்த நிகழ்வு :
மனிதர்களுடன் சேர்ந்து யானைகளும் விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொள்வது, மனித–விலங்கு அன்பும் ஆன்மீக பிணைப்பும் எவ்வளவு வலிமையானது என்பதை வெளிப்படுத்துகிறது. முதுமலை முகாமின் இந்த விழா, பாரம்பரியத்தையும் இயற்கை ஒற்றுமையையும் ஒருசேர எடுத்துக் காட்டுகிறது.
நமது செய்தியாளர் :கரன்சி சிவக்குமார்