Followers

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருவாச்சி பறவைக்கான பாதுகாப்பு மையம் அமைய உள்ளது

 ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருவாச்சி பறவைக்கான பாதுகாப்பு மையம் அமைய உள்ளது


வால்பாறை:

தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் (Anamalai Tiger Reserve) புதிய வரலாற்றை பதிவு செய்துள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக இருவாச்சி (Hornbill) பறவைகளுக்கான சிறப்பு பாதுகாப்பு மையம் இங்கு அமைக்கப்பட உள்ளது.


இந்தியாவின் முதல் "Centre of Excellence for Hornbill Conservation" என்ற சிறப்புமிக்க பட்டம் இதன் மூலம் தமிழ்நாட்டுக்கு கிடைத்துள்ளது.


இருவாச்சி பறவையின் முக்கியத்துவம்:

இருவாச்சி பறவைகள் காட்டின் "Seed Disperser" என அழைக்கப்படுகின்றன. மரங்களின் விதைகளை பரப்பி வன வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்காற்றுகின்றன. இதனால் இவை "காட்டின் விவசாயிகள்" என்றும் குறிப்பிடப்படுகின்றன. ஆனால், வனச்சூழல் அழிவு, கூடு அமைக்கும் மரங்களின் குறைபாடு, வேட்டையாடுதல் போன்ற காரணங்களால் இவை குறைந்து வருகின்றன.



இந்த மையத்தின் மூலம்:

1.இருவாச்சி பறவைகளின் வாழ்விடங்களைப் பாதுகாப்பது.


2.இனப்பெருக்கம் மற்றும் கூடு அமைக்கும் பழக்கங்களை ஆய்வு செய்வது.

3.வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், இயற்கை ஆர்வலர்களுக்கு பயிற்சிகள் வழங்குவது.

4.பொதுமக்களுக்கு பறவைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது.

தமிழ்நாடு வனத்துறை தெரிவித்ததாவது:

இருவாச்சி பறவைகள் இயற்கையின் சமநிலையை பேணும் உயிரினங்கள். இவை இல்லாமல் காடுகள் குறையும் அபாயம் உள்ளது. எனவே, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அமைக்கப்படும் இந்த மையம் நாட்டின் பறவை பாதுகாப்பு முயற்சிகளில் ஒரு முக்கிய முன்னேற்றமாகும்.”


நமது செய்தியாளர் :வடிவேல்

Post a Comment

Previous Post Next Post