வால்பாறை : மலுக்கப்பாறையில் இருந்து சாலக்குடி நோக்கிச் சென்ற கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து முன்வந்த யானைக் கூட்டம்
வால்பாறை:
திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளி அருகே வாழைச்சாலை நேற்று 7 :30மணி அளவில் இந்த பரபரப்பான நிகழ்வு நடந்தது.
மலக்கப்பாறையில் இருந்து சாலக்குடி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து முன் திடீரென காட்டு யானைக் கூட்டம் வந்து வழியை மறித்தது. அந்த கூட்டத்தில் குட்டியானையும் இருந்தது.
யானைகள் சாலையில் நின்றதை கண்ட ஓட்டுநர் உடனே பேருந்தை நிறுத்தினார். அப்போது, அந்த யானைகளில் ஒன்று திடீரென பேருந்தில் மோதியது. இதனால் பேருந்தின் பம்பர் சேதமடைந்தது.
பின்னர் ஓட்டுநர் பேருந்தை ஸ்டார்ட் செய்ததும், யானைக் கூட்டம் சாலையிலிருந்து விலகியது. அதன்பின் பேருந்துசென்றது
இந்தச் சம்பவம் நேற்று மாலை 7:30 மணியளவில் நடைபெற்றது.
நமது செய்தியாளர் :விபின்