உதகை – ஐயப்பன் கோயிலில் கரடி நுழைந்த பரபரப்பு, சிசிடிவி காட்சி வைரல்
உலகை:
நீலகிரி மாவட்டம் உதகை பகுதியில் உள்ள ஐயப்பன் கோயில் வளாகத்தில் பரபரப்பான சம்பவம் ஒன்று நடந்தது.
கோயில் வளாகத்திற்குள் கரடி ஒன்று நுழைந்து, அறைக்குள் புகுந்து உணவு தேடியது.
இந்நிகழ்வு அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, வைரலாகியுள்ளது.
இதனால் அந்த பகுதியில் உள்ள கோயில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சமும் பரபரப்பும் நிலவுகிறது.
நமது செய்தியாளர்: கரன்சி சிவக்குமார்
