வால்பாறை – சாலக்குடி சாலையில் கபாலி யானை சாலையில் நின்றதால் போக்குவரத்து பாதிப்பு
வால்பாறை :இன்று காலை 7:30 வால்பாறையில் இருந்து சாலக்குடி நோக்கி சுமார் 40 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து பத்தடி பாலம் பகுதியில் சென்றபோது பரபரப்பான நிலைமை ஏற்பட்டது.
அந்த நேரத்தில் காட்டு கொம்பன் கபாலி திடீரென சாலையில் பேருந்தின் முன்பாகவே நின்றது. இதனால் பேருந்து ஓட்டுநர் வாகனத்தை உடனே நிறுத்தி விட்டார். சில நிமிடங்கள் சாலையை மறித்து நின்ற கபாலி யானை மெதுவாக சாலையிலிருந்து விலகி வனப்பகுதியில் சென்றது இதையடுத்து பேருந்து மீண்டும் தனது பயணத்தைத் தொடங்கி சாலக்குடி
இந்தக் காட்சியை அப்போது பேருந்தில் பயணித்த ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது.
— நமது செய்தியாளர் : விபின்
