ஈரோடு – தாளவாடி அருகே திம்பம் மலைப்பாதையில் உலாவிய சிறுத்தை – வாகனத்தை பின்னோக்கி இயக்கி வீடியோ பதிவு, வனத்துறையினர் எச்சரிக்கை
ஈரோடு மாவட்டம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட தாளவாடி அருகே உள்ள திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை ஒன்று சாலையில் உலா வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சத்தியமங்கலம் – மைசூரு தேசிய நெடுஞ்சாலையின் முக்கிய மலைப்பாதையான திம்பம் 27 ஹேர்பின் பெண்ட் கொண்டது. தினசரி ஏராளமான வாகனங்கள் இந்த பாதையில் சென்று வருகின்றன. இந்நிலையில், கடந்த இரவு ஒரு கார் பயணிகள் திம்பம் மலைப்பாதையில் பயணம் செய்தபோது சாலை ஓரத்தில் சிறுத்தை ஒன்று நடமாடியது.
அதை கண்டு வாகன ஓட்டி வாகனத்தை பின்னோக்கி இயக்கி கைப்பேசியில் வீடியோ பதிவு செய்தனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதைப் பற்றி வனத்துறை தெரிவிக்கையில்:
இரவு நேரங்களில் வன சாலையில் பயணம் செய்யும் போது வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வனப்பகுதியில் வனவிலங்குகளின் நலன் கருதி, வாகனங்களை சாலையோரம் நிறுத்திவிட்டு இறங்கக் கூடாது வன விலங்குகளை துன்புறுத்தும் வகையில் வீடியோ பதிவு மற்றும் புகைப்படம் எடுப்பது தவிர்க்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
நமது செய்தியாளர்: முருகானந்தம்
