Followers

மூணார்:பெரியகானல் தேயிலை தோட்டப் பகுதியில் பாறையில் போஸ் கொடுத்த காட்டு யானைகள் – வீடியோ வைரல்

 மூணார்:பெரியகானல் தேயிலை தோட்டப் பகுதியில் பாறையில் போஸ் கொடுத்த காட்டு யானைகள் – வீடியோ வைரல்



மூணார் : ஆனையிரங்கள் அணை அருகே உள்ள பெரியகானல் டீ எஸ்டேட் தேயிலை தோட்டத்தில் வியப்பூட்டும் காட்சி ஒன்று பதிவாகியுள்ளது.


அங்கு காட்டு யானைகள் குழுவாக பாறைகள் மீது ஏறி நின்று உணவு தேடும் காட்சிகள் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. பாறையின் மீது ஒய்யாரமாக நின்ற அந்த யானைகள், போஸ் கொடுக்கும் போல தோன்றியதால், அங்கு இருந்தவர்கள் ஆச்சரியத்துடன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்தனர்.



தற்போது, அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி, பலராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன.

நமது செய்தியாளர்:மூணார் மணிகண்டன் 

Post a Comment

Previous Post Next Post