உதகையில் வியப்பூட்டும் காட்சி – வரவேற்பு பலகை ஓவியத்தை பார்த்து நிஜ யானை அச்சம்
நீலகிரி மாவட்டம்:
நீலகிரி மாவட்டம் உதகை – மசினக்குடியில் இருந்து முதுமலை நோக்கி செல்லும் சாலையில் வியப்பூட்டும் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
அங்கு சாலையோரத்தில் “வரவேற்பு பலகை” ஒன்றில் யானையின் அழகிய ஓவியம் வரையப்பட்டிருந்தது. அந்தப் பாதையில் சென்ற காட்டு யானை ஒன்று, பலகையில் வரையப்பட்டிருந்த அந்த ஓவியத்தை கண்டு குழப்பமடைந்தது. உண்மையில் இன்னொரு யானை தான் முன் நிற்கிறது என தவறாக எண்ணிய யானை, அந்த ஓவியத்தைத் தொட்டு தொட்டு ஆராய்ந்தது.
இந்தக் காட்சி அங்கு சென்றிருந்த சுற்றுலா பயணிகளை ஆச்சரியப்படுத்தியது. பலரும் அந்த தருணத்தை தங்களின் மொபைல் கேமராவில் பதிவு செய்தனர்.
வனத்துறை அதிகாரிகள், கூறுகையில்
“யானைகள் அதிக புத்திசாலிகள். அவை தங்களின் பகுதியை பாதுகாக்கும் இயல்புடையவை. ஓவியத்தை மற்றொரு யானை என நினைத்து, எச்சரிக்கையுடன் அணுகி பார்த்திருக்கலாம்” என தெரிவித்துள்ளனர்.
சற்றே வினோதமாக இருந்தாலும், இயற்கையின் அழகிய விளையாட்டாகிய இந்த நிகழ்வு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த காட்சியாக பரவலாக பேசப்படுகிறது.
நமது செய்தியாளர்: கரன்சி சிவக்குமார்
