Followers

அதிரப்பள்ளி அருகே காலில் காயமடைந்து சுற்றித்திரிந்த காட்டு யானைக்கு வனத்துறை மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளித்தது.

 அதிரப்பள்ளி அருகே காலில் காயமடைந்து சுற்றித்திரிந்த காட்டு யானைக்கு வனத்துறை மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளித்தது.




அதிரப்பள்ளி:

சுமார் 15 வயது மதிக்கத்தக்க இந்த யானை, சில நாட்களுக்கு முன்பு காலடி பிளாண்டேஷன் எட்டாம் பிளாக்கில் எருமத்தடம் அருகே காயத்துடன் காணப்பட்டது. உடனடியாக வனத்துறை ஊழியர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில், உயர் அதிகாரிகள் மருத்துவர்களின் ஆலோசனையுடன் யானைக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர்.

தலைமை வனவிலங்கு காப்பாளர் உத்தரவின் பேரில், நேற்று (19/9/2025)  அதிகாலை எர்ணாகுளம் உதவி வனவிலங்கு கால்நடை மருத்துவர் டாக்டர் பினோய் தலைமையிலான மருத்துவக் குழுவும், வனத்துறை அதிகாரிகளும் இணைந்து காலடி பிளாண்டேஷன் எட்டாம் பிளாக்கில் எருமத்தடம் அருகே யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர்.


பின்னர் மருத்துவர்கள் காயத்தை சுத்தம் செய்து மருந்து வைத்தனர். மதியம் வரை மயக்க நிலையில் இருந்த யானை, பிற்பகலில் மயக்கம் தெளிந்ததும் மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்பப்பட்டது.


தற்போது யானை அதிரப்பள்ளி பகுதியில் சுற்றித் திரிகிறது. இதனை தொடர்ந்து கண்காணிக்க வனத்துறை ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையில் வாழச்சால் வன அதிகாரி சுரேஷ் பாபு ஐ.எஸ் தலைமையில், டாக்டர் பினோய் சி. பாபு, டாக்டர் டேவிட் ஆபிரகாம், டாக்டர் ஓ.வி. மிதுன் உள்ளிட்டோர் மற்றும் சுமார் 40 வனத்துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.


– நமது செய்தியாளர் :விபின்




Post a Comment

Previous Post Next Post